Saturday, December 24, 2016

கோவிந்தாவிடம் மன்னிப்பு கேட்ட கரண் ஜோகர்


கோவிந்தாவிடம் மன்னிப்பு கேட்ட கரண் ஜோகர்



24 டிச,2016 - 14:14 IST






எழுத்தின் அளவு:








எந்த துறையாக இருந்தாலும் சரி பீல்ட்டில் இருக்கும்போது, அதுவும் பீக்கில் இருக்கும்போது தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். சினிமாவுக்கு மட்டும் அது விதிவிலக்காகிவிடுமா... என்ன.? பீக்கில் இருக்கும் வரை பெயர், புகழ், மரியாதை எல்லாம் கிடைக்கும், கொஞ்சம் பீல்டு அவுட்டானாலும் சினிமா துறையில் இருப்பவர்களே மறந்து விடுவார்கள். அப்படி தான் நடிகர் கோவிந்தாவிற்கும் நடந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்த கோவிந்தா, இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது ஆ கயா ஹீரோ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற கோவிந்தா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, கரண் ஜோகர் தனது ‛காபி ஷோ' நிகழ்ச்சியில் என்னை மட்டும் அழைக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதுப்பற்றி கரண் ஜோகரிடம் கேட்டபோது, முதலில் கோவிந்தாவிடம் மன்னிப்பு கோருவதாக கூறினார். பின்னர் அவர் பேசுகையில், ‛‛நான் அவரை அழைக்கவில்லை என்றார். அப்படியல்ல, அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது பற்றி பலமுறை பேசியிருக்கிறேன், ஆனால் அதற்கான நேரம் கூடி வரவில்லை. கோவிந்தா எனது நிகழ்ச்சிக்கு வந்தால் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன். அதேசமயம் நான் அழைக்கவில்லை என்பதால் அவரது மனம் வருத்தப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை அழைக்காததற்கு தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை. கோவிந்தா ஒரு அற்புதமான நடிகர், இப்போது சொல்கிறேன், அவரை எங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கிறேன், விரைவில் அவரை சந்தித்து முறைப்படி அழைப்பேன்'' என்று கூறினார்.


0 comments:

Post a Comment