Tuesday, January 10, 2017

வசூலில் சாதனை படைக்குமா 'கைதி நம்பர் 150' ?


வசூலில் சாதனை படைக்குமா 'கைதி நம்பர் 150' ?



10 ஜன,2017 - 17:06 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்தியத் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்தை விட வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவர் சிரஞ்சீவி. சினிமாவை விட்டு விலகி அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். பின்னர் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவருடைய 150வது படமாக நாளை 'கைதி நம்பர் 150' படம் வெளியாக உள்ளது.

தெலுங்குத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் ஒரு பெரிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் இதுவரை 'பாகுபலி' படம்தான் முதல் நாள் வசூல் சாதனையையும், மொத்த வசூல் சாதனையையும் வைத்துள்ளது. ஆனால், 'கைதி நம்பர் 150' படம் 'பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூலைக் கண்டிப்பாக முறியடிக்கும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

'பாகுபலி' படம் முதல் நாள் வசூலாக 22 கோடி ரூபாயை வசூலித்தது. 'கைதி நம்பர் 150' படம் முதல் நாளில் மட்டும் சுமார் 25 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

சுமார் 100 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ள இந்தப் படம் முதல் வார முடிவுக்குள்ளாகவே 100 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள். இப்படத்தின் விழா ஒன்று சில நாட்கள் முன்பு நடந்த போது கூடிய கூட்டமே அதற்கு சாட்சியாக அமைந்துவிட்டது. தன்னை மீண்டும் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக இந்தப் படம் மூலம் சிரஞ்சீவி நிரூபிப்பார் என அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment