Wednesday, January 11, 2017

போகனுக்கு கிடைத்தது யு சான்றிதழ்: ரிலீசுக்கு தடை வருமோ? தயாரிப்பாளர் கலக்கம்


போகனுக்கு கிடைத்தது யு சான்றிதழ்: ரிலீசுக்கு தடை வருமோ? தயாரிப்பாளர் கலக்கம்



11 ஜன,2017 - 13:48 IST






எழுத்தின் அளவு:








'தனி ஒருவன்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருக்கும் படம் 'போகன்'. லைக் ஃபாதர் லைக் சன் என்ற ஆங்கிலப்படத்தின் காப்பியான இப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார். சிவாஜியின் பேரனான துஷ்யந்த் தயாரித்து சமீபத்தில் வெளியாகி படுதோல்வியடைந்த மீன்குழம்பும் மண்பானையும் படமும் போகன் கதையும் ஒரே கதைதான். அந்தப் படமும் லைக் ஃபாதர் லைக் சன் படத்திலிருந்து சுடப்பட்டதுதான்.

ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பிரபுதேவாவின் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' தயாரித்திருக்கிறது. போகன் படம் இம்மாத இறுதியில் ரிலீஸாவதை ஒட்டி இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. போகன் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய வகையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படத்தை வெளியிடும் வேலையில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் போகன் கதைக்கு உரிமை கொண்டாடிய உதவி இயக்குநரால் நீதிமன்ற தடை உத்தரவு வந்துவிடுமோ என்ற கலக்கத்திலும் இருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.


0 comments:

Post a Comment