Wednesday, January 11, 2017

‘ஜல்லிக்கட்டு’ வேண்டாம்… விவேக்குடன் மல்லுக்கட்டிய ரசிகர்கள்

actor vivekhதமிழர்களின் வீரவிளையாட்டில் ஒன்று ஜல்லிக்கட்டு…


இதில் மாடு முட்டி பலர் காயமடைவதை சுட்டிக்காட்டி சின்ன கலைவாணர் விவேக் ஒரு படத்தில் காமெடி செய்திருப்பார்.


அந்த காமெடி வீடியோவை சிலர் இணையங்களில் பகிர்ந்துள்ளனர்.


இதுகுறித்து விவேக் கூறியதாவது…


“ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துங்கள் என்று தான் அந்த காமெடியில் சொல்லியிருப்பேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விவேக்.


மேலும் மற்றொரு பதிவில்…


ஜல்லிக்கட்டில் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டினேன்! ஆனால் ஜல்லிக்கட்டுக்கே ஆபத்து வந்தால் சும்மா இருக்க மாட்டேன். I support jallikattu


என்று தெரிவித்துள்ளார்.


இவரின் ஜல்லிக்கட்டு தொடர்பான மற்ற கருத்துக்களை சன் டிவி பேட்டியில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment