சாய் பல்லவிக்கு முதலிடம் கொடுத்த ரசிகர்கள்!
03 பிப்,2017 - 08:49 IST

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான படம் பிரேமம். இந்த படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அவர் நடித்திருந்த மலர் டீச்சர் என்ற வேடம் தென்னிந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. அதை யடுத்து, களி என்ற மலையாள படத்திலும் நடித்த சாய் பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கு என பரவலாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்ற கண்டிசனை முன்வைத்து கதைகளை செலக்ட் பண்ணி வருகிறார்.
இந்நிலையில், கொச்சி டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகர் - நடிகை யார்? என்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில் நடிகையர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் சாய் பல்லவி. முகத்தில் பருக்களுடன் தலைமுடியை பறக்க விட்டபடி பெரிய அளவில் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் அவர் நடித்திருந்தது தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாக ரசிகர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்களாம். இதையடுத்து தன்னை தேர்வு செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
0 comments:
Post a Comment