Thursday, February 2, 2017

அம்மா-மகன் பாசத்தை புரிய வைக்கும் செவிலி


அம்மா-மகன் பாசத்தை புரிய வைக்கும் செவிலி



02 பிப்,2017 - 14:19 IST






எழுத்தின் அளவு:








புதுமுக இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள படம் செவிலி. அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, உள்பட பலர் நடித்துள்ளர். வி.எம்.ஜீவன் இசை அமைத்துள்ளார், கே.பீர்முகமது தயாரித்துள்ளார். இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாசத்தை சொல்லும் படம் என்கிறார் இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த். அவர் மேலும் கூறியதாவது:

உலகத்திலேயே அற்புதமான விஷயம் அம்மா மகன் பாசம்தான். காதலை விட இது உன்னதமானது. ஆனால் சிலரால் இந்த பாசம் புரிந்து கொள்ளப்படாமல் போகிறது. அம்மா மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை மகன் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. படத்தின் கதை அதுதான். தாயின் பாசத்தை மகன் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறான். அந்த தாயின் மீது பாசம் வைத்திருக்கும் ஹீரோயின். அவனுக்கு அவன் தாய் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை புரிய வைக்க நினைக்கிறாள். அதற்காக முயற்சிக்கும்போது காதல் அரும்புகிறது.

ஒரு கட்டத்தில் தனக்கு தாயின் பாசத்தை புரிய வைப்பதற்காகத்தான் காதலித்தாள் என்ற தெரிய வருகிறபோது அந்த காதலை வெறுக்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இது உணர்வுகளின் போராட்டம், செண்டிமெண்ட், காமெடி, காதல், ஆக்ஷன் கலந்து உருவாகி உள்ளது. என்றார் ஆனந்த்.


0 comments:

Post a Comment