Tuesday, February 14, 2017

மோகன்லால் ரசிகர்கள் மீது புகார் கொடுக்க தயாராகும் பெண் தயாரிப்பாளர்..!


மோகன்லால் ரசிகர்கள் மீது புகார் கொடுக்க தயாராகும் பெண் தயாரிப்பாளர்..!



14 பிப்,2017 - 16:44 IST






எழுத்தின் அளவு:








ஒரு படம் நன்றாக ஓடி வசூல் செய்துவிட்டாலும் கூட ஒரு தயாரிப்பளருக்கு பிரச்சனைகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதேபோல தங்களது அபிமான நடிகரின் படம் நன்றாக ஓடினாலும் கூட ரசிகர்களின் மனக்குறை தீர்ந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. இதற்கு சமீபத்திய உதராணமும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பளாரும், மோகன்லாலின் ரசிகர்களும் தான். இந்தப்படத்தை தயாரித்தவர் சோபியா பால் என்கிற பெண் தயாரிப்பாளர். இவர் தான் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் இணை தயாரிப்பாளரும் கூட. தற்போது இவர் துபாயில் இருக்கிறார்.

சமீபத்தில் இவரை பற்றியும் இவரது மகன் கெவின் பால் பற்றியும் இவர்களது பேஸ்புக் டைம்லைனில் மோகன்லாலின் ரசிகர்கள் மிகவும் மோசமாக கமென்ட் அடித்து வருகிறார்களாம். அதற்கான காரணத்தை கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள். படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றாலும் படத்திற்கு மேலும் மேலும் பப்ளிசிட்டி செய்யவில்லை என்றும் அடுத்தடுத்த புதிய போஸ்டர்களை வெளியிடவில்லை என்றும் கூறித்தான் இப்படி மோசமாக திட்டுகிறார்களாம். இதனால் மோகன்லால் ரசிகர்கள் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் தயாரிப்பாளர் சோபியா பால்.


0 comments:

Post a Comment