வின்னர் பட பாடலை வெளியிடும் ரவி தேஜா
15 பிப்,2017 - 08:54 IST

சாய் தரண் தேஜ், ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வின்னர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது. தாகூர் மதுவின் இணை தயாரிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கியுள்ள வின்னர் படத்தின் புரமோஷனில் படக்குழு தற்போது பிசியாகியுள்ளது. இப்படத்தின் சிங்கிள் டிராக்கை டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். இன்று(பிப் 14) இரவு 7 மணி அளவில் வின்னர் பட சிங்கிள் டிராக்கை ரவிதேஜா தனது டுவிட்டரில் வெளியிடுவார் என தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24ல் திரைக்கு வரவிருக்கும் வின்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
0 comments:
Post a Comment