Monday, February 13, 2017

வில்லன் வேடத்தை விரும்பி நடித்தேன் : லகுபரன்


வில்லன் வேடத்தை விரும்பி நடித்தேன் : லகுபரன்



14 பிப்,2017 - 10:37 IST






எழுத்தின் அளவு:








‛ராட்டினம்', ‛ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படங்களில் ஹீரோவாக நடித்தவர் லகுபரன். அதன்பிறகு எட்டுத்திக்கும் மதயானை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர் தற்போது ‛கிருமி' கதிர் நாயகனாக நடித்து வரும் ‛சத்ரு' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த வில்லன் வேடம் குறித்து லகுபரன் கூறுகையில், ஹீரோ வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காததால்தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ஆனால் இந்த வேடத்தையும் மகிழ்ச்சியுடன் விரும்பி தான் நடித்தேன். வடசென்னை கதை என்பதால் அதற்கேற்ப என்னை முழுமையாக மாற்றி நடித்தேன், நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இதற்கு முன்பு என்னை பார்த்ததை விட இந்த படம் அதிரடியாக இருக்கும். அதோடு என் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

முக்கியமாக, வில்லன் வேடத்தில் நிறைய ஒர்க்அவுட் பண்ணி மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறேன். இது எனக்கு எப்படி வித்தியாசமான அனுபவமாக அமைந்ததோ அதேப்போல் ரசிகர்களுக்கும் அமையும். அதோடு, இன்னொரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறேன் என்று கூறும் லகுபரன், இனிமேல் ஹீரோ-வில்லன் என்கிற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டேன். என் திறமையை வெளிப்படுத்த எந்த மாதிரியான வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பேன் என்கிறார்.


0 comments:

Post a Comment