Thursday, February 2, 2017

போகன் விமர்சனம்

நடிகர்கள் : ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா, வருண், அக்ஷரா கௌடா, ஆடுகளம் நரேன், நாசர், பொன்வண்ணன், ஜாமி மற்றும் பலர்.
இயக்கம் : லட்சுமணன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சௌந்தர்ராஜ்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : பிரபுதேவா ஸ்டூடீயோஸ்


????????????????????????


கதைக்களம்…


போகன்.. அட என்னப்பா.. இதுவும் ஒரு கூடுவிட்டு கூடு பாயும் கதைதான் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம்.


ஆனால்… அப்படிபார்த்தால் வரும் படங்களில் 80 சதவிகிதம் காதல்கதைதான் என்று ஒதுக்கிவிட முடியுமா? அதை இயக்குனர் எப்படி சொல்லியிருக்கிறார் என்பதுதானே சுவாரஸ்யம். அப்படி ஒரு சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் போகன்.


ஆதித்யா (அரவிந்த் சாமி), மிகப்பெரிய பணக்காரர். ஆனால் பணத்துக்காக எதையும் செய்யும் அதாவது கொள்ளையடிக்கும் குணம் கொண்டவர்.


ஆனால் இவர் கொள்ளையடிக்காமல், ஒரு அபூர்வ சக்தியைப் பயன்படுத்தி மற்றவர்களை அதில் சிக்கவைத்து வாழ்பவர் இவர்.


விக்ரம் (ஜெயம் ரவி) ஒரு போலீஸ். இவருக்கும் மகாலட்சுமிக்கும் (ஹன்சிகா) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது.


இந்நிலையில் அர்விந்த் சாமியின் சூழ்ச்சியால், ஜெயம்ரவியின் அப்பா சிக்கிக் கொள்ள, அதன்பிறகு ஜெயம் ரவிக்கும் அரவிந்த்சாமிக்கும் நடக்கும் உச்சக்கட்ட போராட்டமே போகன்.


bogan team


கதாபாத்திரங்கள்…


இதில் ரெண்டு ஹீரோ. ரெண்டு வில்லன் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரும் சாட்சாத் ஜெயம்ரவியும் அர்விந்த்சாமியும்தான்.


அர்விந்த்சாமி ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துவிட்டார். இந்த படத்திற்கு பிறகு இனி ஜெயம் ரவியும் வில்லனாக நடிக்கலாம்.


அரவிந்த்சாமியாக ஜெயம்ரவி மாறியபின் அவரைப் போல் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார்.


அதுபோல், தன்னுடைய வில்லத்தனத்தை ஸ்டைலிஷ்ஷாகவும் அப்பாவியாகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் அரவிந்த் சாமி.


இவர்களுடன் ஹன்சிகாவும் போட்டிக் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கிளாமராகவும் வந்து ரசிக்க வைக்கிறார்.


நாசர், பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், நாகேந்திர பிரசாத் மற்றும் வருண் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


’ஆரம்பம்’ புகழ் அக்‌ஷரா கெளடா சில காட்சிகளிலேயே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.


jayam ravi hansika


தொழில்நுட்ப கலைஞர்கள்…


இமான் இசை இதிலும் குறை வைக்கவில்லை. அதிலும் பின்னணி இசையில் பின்னிஎடுத்துவிட்டார்.


இயக்குநர் காட்சியை சுவாரஸ்யமாக வைத்திருந்தாலும், அதை ரசிக்கும்படி செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் செளந்தரராஜன்தான்.


மதன்கார்க்கி வரிகளுக்கு சங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள வாராய் வாராய் பாடலை எத்தனை முறை வேண்டுமனாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


தாமரை எழுதியுள்ள செந்தூரா பாடலும் ரசிக்கலாம்.


டமாலு டூமீலு பாடலில் எல்லா நடிகர்களும் வருவதால் தியேட்டரில் ஆரவாரம்தான்.


முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருக்கலாமே என்று எடிட்டர் ஆண்டனியிடம் கேட்க தோன்றுகிறது.


சில லாஜிக் மீறல் இருந்தாலும் தன்னுடை விறுவிறுப்பான திரைக்கதையால் குறைகளை திணறடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமணன்.


போகன்…. போற்றக்கூடியவன்

0 comments:

Post a Comment