பாலியல் கொடூரர்களை சுட்டு தள்ள வேண்டும் - விஷால்
20 பிப்,2017 - 12:39 IST

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு தள்ள வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார். துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பிற்காக சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் படப்பிடிப்பில் இருந்த விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய விஷால்... ‛‛நடிகை பாவனாவிற்கு நேர்ந்த சம்பவத்தை துணிச்சலாக அவர் வெளி கொணர்ந்தது பாராட்டுக்குரியது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது தான். ஒரு நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். இதுகுறித்து எங்களின் நடிகர் சங்கத்தின் சார்பில் கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம், நேரில் சந்தித்து முறையிடவும் உள்ளோம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், எண்ணூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் அல்லது துப்பாக்கியால் சுட்டு தள்ளினாலும் வரவேற்கத்தக்கது. இது எனது தனிப்பட்ட கருத்து.
முதல்வராக ஓபிஎஸ்., வந்தாலும் சரி, இடைப்பாடி பழனிசாமி வந்தாலும் சரி யார் ஆட்சி செய்தாலும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்யுங்கள். சட்டசபை வளாகத்தில் சபாநாயகரின் இருக்கையில் எம்எல்ஏ., ஒருவர் அமர்ந்திருந்தது வருந்தத்தக்க செயல்.
இவ்வாறு விஷால் கூறினார்.
0 comments:
Post a Comment