கதாநாயகி பெயரை முதலில் போடுவதற்கு விதார்த் எதிர்ப்பு தெரிவித்தாரா?- டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா பதில்
16 மார்,2017 - 12:53 IST

காக்கா முட்டை மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுரேஷ் சங்கைய்யா. விதார்த்-ரவீணா நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டீலில் முதலில் ஹீரோவின் பெயரை போடுவதில் இருந்து மாறுபட்டு ஹீரோயின் ரவீணாவின் பெயரை போடுகிறார்கள். இதுகுறித்து படநாயகன் விதார்த் எந்தமாதிரியான ரியாக்ட் செய்தார் என்று டைரக்டர் சுரேஷ் சங்கையாவிடத்தில் கேட்டபோது,
பெண்களையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சிதான் அது. தாய் - தந்தை என்று தானே சொல்வோம். அந்த ஒரு விசயத்தை மனதில் கொண்டு கதாநாயகியின் பெயருக்கு முதலிடம் கொடுக்கிறோம். ஹீரோ விதார்த் இதற்கு எதுவும் சொல்லவில்லை. முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். அவருக்கும் அம்மாதானே முதலில்.
மேலும், விதார்த்தைப் போலவே பட நாயகி ரவீணாவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அவர் ஏற்கனவே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். டப்பிங்கில் எல்லா ரியாக்சனும் பண்ணி பேசுவதால் அவருக்கு நடிப்பு எளிதாக, இயல்பாக வந்துள்ளது. ஹீரோ புதுமாப்பிள்ளை, ஹீரோயின் புதுப்பொண்ணு அவர்களுக்குள் நடக்கிற கதைதான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு படம் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா. இந்த படத்தின் ஆடியோ விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment