இணையதள வில்லங்கத்தில் இருந்து தப்பிக்கும் காஜல்அகர்வால்!
14 மார்,2017 - 09:26 IST

அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் 61வது படங்களில் நாயகியாக நடித்து வரும் காஜல்அகர்வால், தெலுங்கில் ராணா நடிக்கும் நானே ராஜா நானே மந்திரி படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அந்த ஏரியாவில் மழை கொட்டியதால், காஜல்அகர்வால், ஆடிப்பாடும் பாடல் காட்சியொன்றை நிஜமான மழையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.
மேலும், முன்பெல்லாம் அவுட்டோர்களுக்கு சென்றால், அங்கு தன்னை பார்க்க வரும் ரசிகர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த காஜல்அகர்வால், இப்போது யாரையுமே தன்னை நெருங்க விடுவதில்லையாம். கார ணம், ரசிகர்கள் என்று சொல்லி தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ப வர்கள், பின்னர் அவற்றை தவறான கோணத்தில் சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுகிறார்களாம். இப்படி பலமுறை நடந்துள்ளதாம். அதனால், இனிமேல் முன்னபின்ன அறிமுகம் இல்லாதவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் காஜல்அகர்வால்.
0 comments:
Post a Comment