Tuesday, March 14, 2017

நான் கிளாமருக்கு செட்டாவேனா என்பதை டைரக்டர்கள்தான் சொல்ல வேண்டும்! -கெளசிகா


நான் கிளாமருக்கு செட்டாவேனா என்பதை டைரக்டர்கள்தான் சொல்ல வேண்டும்! -கெளசிகா



15 மார்,2017 - 09:06 IST






எழுத்தின் அளவு:








துணை முதல்வர் படத்தில் பாக்யராஜின் தங்கையாக நடித்தவர் கெளசிகா. தற்போது இணையதளம் படத்தில் ஸ்வேதாமேனனின் தங்கையாக நடித்துள்ளார். துணை முதல்வர் படத்தைப்போலவே இந்த படத்திலும் எனக்கு லவ்ட்ராக் உள்ளது என்று கூறும் கெளசிகா, நான் கிளாமருக்கு செட்டாவேன் என்ற டைரக்டர்கள் சொன்னால் கண்டிப்பாக கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்துவேன் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இணையதளம் படத்தில் ஈரோடு மகேசுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். எனது ரோல் வித்தியாசமானது. ஸ்வேதாமேனனின் தங்கச்சி நான். ஈரோடு மகேஷ், கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதாமேனன் போலீசாக நடித்துள்ளார்கள். எனக்கும் ஆக்சனுக்கும் சம்பந்தமில்லை. மகேசுடன் ரொமாண்டிங், ஸ்வேதாமேனனுடன் பேமிலி சீன்களில் நடித்துள்ளேன். எனக்கென ஒரு ட்ரேக் உள்ளது. படத்தில் நான் வீணை வாசிப்பேன். திக்கித்திக்கி பேசுவேன். நானே டப்பிங் பேசியுள்ளேன். நடிப்பதற்கு முன்பு உங்களுக்கு எந்த இடத்தில் தேவையோ அந்த இடத்தில் திக்கி பேசுங்கள் என்றனர். வீணை வாசிக்க பத்து வருடத்துக்கு முன்பு கற்றுக்கொண்டேன். டச் விட்டுப்போனதால்

இந்த படத்திற்காகவும் ஒரு மாசம் வீணை கிளாசுக்கு சென்றேன். அதன்பிறகு தான் எனக்கு அந்த பயிற்சி வந்தது.

மேலும், துணை முதல்வர் படத்தில் பாக்யராஜின் தங்கையாக நடித்தேன். அதிலும் எனக்கு தனி லவ் ட்ராக் இருந்தது. அதில் ஸ்வேதாமேனன் எனக்கு அண்ணியாக நடித்தார். அப்போதே நிஜமான அக்காள் போலவே என்னிடம் பழகினார் அவர். நிஜமாலுமே சகோதரிகளாக இருந்தால் எப்படி இருப்போம் அப்படி இருந்தோம். ரொம்ப ஜாலி டைப். யாரைப்பார்த்தாலும் ஸ்வீட்டாக பேசுவார்கள். அந்தவகையில், ஸ்வேதாமேனன் பர்சனலாக எனக்கு பிடிக்கும்.

இந்த படத்தையடுத்து 3 கதைகள் கேட்டுள்ளேன். எனக்கு இணையதளம் நல்லதொரு பிரமோசன் கொடுக்கும். இந்த படத்தின் ரிலீசுக்காக வெயிட் பண்ணு கிறேன். பெரிய ஹீரோ படங்களுக்கு முயற்சி எடுக்கிறேன். அதோடு, எனக்கு கிளாமர் செட்டாகும். வல்கர் வேறு. கிளாமர் வேறு. அழகாக கொண்டு போனால் அழகாக இருக்கும். பாடலில் இந்த மாதிரி பண்ண வேண்டும். கிளாமருக்கு நான் செட்டாவேனா என்று டைரக்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். டைரக்டர் கள் சொன்னால் கண்டிப்பாக நடிப்பேன். கமர்சியல் கலந்த கிளாமர் கதாபாத்திரங்கள் வரும்போது அதில் எந்த அளவுக்கு லிமிட்டேசன் வைத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்வேன் என்கிறார் கெளசிகா.


0 comments:

Post a Comment