Thursday, March 16, 2017

அகில் படத்திற்கு தலைப்பு தேடும் விக்ரம்குமார்


அகில் படத்திற்கு தலைப்பு தேடும் விக்ரம்குமார்



16 மார்,2017 - 11:48 IST






எழுத்தின் அளவு:








சூர்யா நடிப்பில் 24 எனும் சயின்ஸ் திரில்லர் படத்தை இயக்கிய டோலிவுட் இயக்குனர் விக்ரம் குமார், மறைந்த நடிகர் நாகேஷ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் பேரன் நாகசைதன்யா இவர்களது நடிப்பில் இயக்கிய மனம் எனும் தெலுங்கு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மனம் படத்திற்கு பின்னர் மீண்டும் நாகார்ஜூனாவுடன் விக்ரம் குமார் இணைந்துள்ளார். இம்முறை நாகார்ஜூனா தயாரிக்கும் படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்குகின்றார். நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் அப்படத்தில் நாயகனாக நடிக்கின்றார்.

இப்படத்திற்கு ஜுன்னு எனும் இனிப்பின் பெயரை தலைப்பாக வைக்க பரிசீலனை நடக்கின்றதாம். மேலும் ஹலோ குரு பிரேமம் கோஸம் எனும் தலைப்பையும் இயக்குனர் நாகார்ஜூனாவிடம் கூறியுள்ளார். இவ்விரு தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்த பின்னர் நாகார்ஜூனா அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகின்றது. சாயிஷா சைகல் மற்றும் மேகா ஆகாஷிடம் நாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment