Friday, March 24, 2017

அனுராக் காஷ்யப் படத்தில் மஞ்சு வாரியர்..!


அனுராக் காஷ்யப் படத்தில் மஞ்சு வாரியர்..!



24 மார்,2017 - 17:57 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப். ரோஹித் ஷெட்டி, கரண் ஜோஹர் போன்றவர்கள் எல்லாம் தமிழில் வரும் படங்களின் மேல் பார்வையை பதித்திருக்க இவர் மட்டும் மலையாள திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்தவிதமாக சமீபத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தை மும்பையில் ஸ்பெஷல் ஒன்றில் பார்த்து ரசித்து பாராட்டியுள்ளார். ஆனால் நாம் சொல்ல வந்த விஷயம் இதை பற்றியல்ல.

இந்த ஸ்பெஷல் ஷோவை பார்ப்பதற்காக மலையாள நடிகை மஞ்சு வாரியரும் வந்திருந்தார். ஆம், அழைத்தவர் அனுராக் காஷ்யப் தான். வெறுமனே இந்தப்படத்தை பார்க்க மட்டும் அழைக்கவில்லை. தான் இயக்கிவரும் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க வேண்டும் என மஞ்சுவிடம் பேசுவதற்காகவும் தான் அழைத்துள்ளார் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஒரு ஓரத்தில் இருந்தாலும், எதிர்பாராத இந்த வாய்ப்பால், அது அனுராக் காஷ்யப் படம் என்பதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம் மஞ்சு வாரியர்.


0 comments:

Post a Comment