Friday, March 24, 2017

நடிகர் செந்தில் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

‘எஸ் 3’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

பிரபல காமெடி நடிகர் செந்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், நேற்றுடன் தனது 66வது வயதை பூர்த்தி செய்யும் செந்திலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, படப்பிடிப்பின் போது, `தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அதிலும், அந்த கேக் அவரது பிரபல வாழைப் பழ காமெடியை நினைகூரும் விதமாக, இரு வாழைப் பழங்கள் இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment