விஜய் 61- தலைப்பு குறித்து படக்குழு விளக்கம்
03 ஏப்,2017 - 10:39 IST

படங்களுக்கு தலைப்பு வைத்து பூஜை போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட வந்த நிலை சமீபகாலமாக மாறி வருகிறது. பல படங்களுக்கு பூஜையே போடுவதில்லை. முதல்நாள் படப்பிடிப்பின்போது கேமரா முன்பு ஒரு தேங்காயை உடைத்து சாமி கும்பிட்டு விட்டு அப்படியே படப்பிடிப்பை தொடங்கி விடுகிறார்கள். அதேபோல், படங்களுக்கான தலைப்பும் வைப்பதில்லை. படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிடும்போதுதான் தலைப்பையே அறிவிக்கிறார்கள். முன்னணி நடிகர்களின் படங்களில்தான் இந்தமாதிரி நடக்கிறது.
இந்நிலையில், விஜய்யின் தெறி படத்திற்கும் தாமதமாக டைட்டீல் அறிவித்தவர்கள் இப்போது அவரது 61வது படத்திற்கும் தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிற செய்தி வெளியானதை அடுத்து மூன்று முகமாக இருக்கலாம் என்று யூகித்த விஜய் ரசிகர்கள் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மூன்று முகம் என்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது விஜய் படக்குழு அந்த டைட்டிலை தாங்கள் வெளியிடவில்லை என்று மறுத்திருப்பதோடு, டைட்டில் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment