மகாபாரதம் பற்றிய கருத்து: கமல் ஆஜராக கோர்ட் உத்தரவு
21 ஏப்,2017 - 14:15 IST

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியாக நடிகர் கமல் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை நேரில் ஆஜராக சொல்லி வள்ளியூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம், தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார். இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.
இதேகருத்தை வலியுறுத்தி, கமல் மீது நடவடிக்கை கோரி கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதோடு இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத பழவுர் ஆய்வாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment