Saturday, April 1, 2017

மஞ்சு வாரியார், ஜோதிகா வரிசையில் இடம்பிடிக்கும் கஜோல்..!


மஞ்சு வாரியார், ஜோதிகா வரிசையில் இடம்பிடிக்கும் கஜோல்..!



01 ஏப்,2017 - 14:43 IST






எழுத்தின் அளவு:








மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் கதாநாயாகியாக நடித்துவந்த மஞ்சுவாரியர் திருமணத்துக்குப்பின் நடிப்பை விட்டு ஒதுங்கினார்.. பல வருடங்கள் கழித்து அவருக்கு ஒரு சரியான ரீ என்ட்ரி அமைத்து தந்த படம் தான் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் வெளியான ஹவ் ஓல்டு ஆர் யூ . மஞ்சுவை போலவே தமிழிலும் இந்தப்படம் 36 வயதினிலே என ரீமேக்காகி ஜோதிகாவின் ரீ என்ட்ரியையும் வெற்றியாக்கியது.. இப்போது இந்தப்படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதில் நடிகை கஜோல் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதை என்பதால் வெற்றி கிட்டத்தட்ட உறுதிதான் என்றாலும் இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப்படத்தின் கதை தன்னைவிட சூர்யாவிடம் இருந்தால் தான் அது சரியான இடத்திற்கு போகும் என்பதால் ஒரிஜினலான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மொத்த இந்திய ரீமேக் ரைட்சையும் சூர்யாவிடமே ஒப்படைத்துவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

தமிழில் இந்தப்படம் வெளியானபோதே மற்ற மொழிகளில் இந்தப்படத்தை ரீமேக் செய்ய பலபேர் போட்டி போட்டனர். அப்படி ரீமேக் ரைட்ஸ் கேட்டு வந்த தயாரிப்பளார்களிடம் சூர்யா வைத்த ஒரே கண்டிஷன் எந்த மொழியானாலும் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இயக்குவார் என்பதுதான். மேலும் இந்தியில் இதன் ரீமேக்கை அஜய் தேவ்கனுடன் சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதால் இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூசே இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகிறது.


0 comments:

Post a Comment