Monday, May 22, 2017

பிரசார் பாரதி போர்டில் நடிகை கஜோல் பதவி பறிப்பு?


பிரசார் பாரதி போர்டில் நடிகை கஜோல் பதவி பறிப்பு?



22 மே,2017 - 11:32 IST






எழுத்தின் அளவு:








பிரசார் பாரதி போர்டில் உறுப்பினரான ஹிந்தி நடிகை கஜோல், தொடர்ந்து மூன்று முறைக்கு மேல், அதன் கூட்டங்களில் பங்கேற்காததால், அவரது பதவியைப் பறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்கேற்கவில்லை : மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அகில இந்திய வானொலி மற்றும் துார்தர்ஷன், டிவி சேனலை, பிரசார் பாரதி போர்டு நிர்வகித்து வருகிறது. இதன் தலைவர், முதன்மை நிர்வாக அதிகாரி, தனி உறுப்பினர் தவிர, பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர். பிரபல ஹிந்தி நடிகை கஜோல், இதில் பகுதி நேர உறுப்பினராக உள்ளார்.

பிரசார் பாரதி விதிமுறைப்படி, அதன் கூட்டத்தில், முன் அனுமதி பெறாமல், தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பங்கு பெறாத பகுதி நேர உறுப்பினர்களின் பதவிபறிக்கப்படும்.நடிகை கஜோல் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது பதவியை பறிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கூட்டங்களில் உறுப்பினர்கள் பங்கேற்ற விபரங்களை, பிரசார் பாரதியிடம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுள்ளது. பிரசார் பாரதி அளிக்கும் தகவலை வைத்து, கஜோல் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

வருத்தம் : இது குறித்து, கஜோல் குடும்பத்தினர் கூறியதாவது: நடிகை கஜோல், பிரசார் பாரதி கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தது உண்மையே. தனிப்பட்ட காரணங்களால் அவரால் பங்கேற்க முடியவில்லை. வேண்டுமென்றே அவர் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை.

பங்கேற்க இயலாததற்கு, தன் வருத்தத்தை ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


0 comments:

Post a Comment