Friday, June 9, 2017

ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி

ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘செம’.

இப்படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில், இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், சதீஷ், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் சூரி பேசும்போது, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வருவதாக சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்க என சொன்னார். என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே என்றேன் என்று கலகலப்பாக பேசினார். நிறைய படங்கள் நடித்தாலும் ஜி.வி.பிரகாஷ் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்று முடித்தார்.

0 comments:

Post a Comment