Saturday, June 10, 2017

கார்த்தி - பாண்டிராஜ் படம் கமர்ஷியல் படம்


கார்த்தி - பாண்டிராஜ் படம் கமர்ஷியல் படம்



10 ஜூன், 2017 - 15:24 IST






எழுத்தின் அளவு:








நடிகர் கார்த்தி கமர்ஷியல் ஹிட் கொடுத்து நீண்ட காலமாகிறது. எனவே, எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார். தற்போது, 'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கார்த்தி பங்குதாரராக உள்ள 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துடன் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் விஷால் உடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பிரபு தேவா தயாரித்து இயக்குகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று', 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி.

இந்த படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் தயாரிக்கிறது. '36 வயதினிலே', 'பசங்க-2', '24', தற்போது தயாரிப்பில் இருந்து வரும் 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களை தயாரித்த 2டி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இந்த படம் உருவாகவிருக்கிறது.

2டி பேனரில் உருவான, '36 வயதினிலே', 'பசங்க-2', '24' ஆகிய மூன்று படங்களுமே கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. எனவே கார்த்தியை வைத்து கமர்ஷியலாக ஒரு மசாலாப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.


0 comments:

Post a Comment