ரஜினி படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு கொலை மிரட்டல்
22 ஜூன், 2017 - 10:06 IST

காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும், காலா படத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தி, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட, எஸ்.பி.,யிடம், ராஜசேகரன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை, காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், நடிகர் ரஜினி நடித்து வரும், காலா கரிகாலன் என்ற படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என, சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், 11ம் தேதி இரவு, கடலுாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறச் சொல்லி, சிலர் மிரட்டியதாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனியிடம், ராஜசேகரன் புகார் அளித்துள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி சாலையில், 11ம் தேதி இரவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, அறிமுகம் இல்லாத நான்கு பேர், ஓட்டலில் புகுந்து, காலா கரிகாலன் படத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை, வாபஸ் வாங்கும்படி மிரட்டினர் என, தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment