'சோலோ'வில் பார்வையற்றவராக நடிக்கும் தன்ஷிகா..!
21 ஜூன், 2017 - 17:09 IST

'கபாலி'யில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்தது அவர்மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. அதை தொடர்ந்து இப்போது மலையாள திரையுலகில் இருந்தும் தன்ஷிகாவுக்கு அழைப்பு வர 'சோலோ' என்கிற படத்தில் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் துல்கரை வைத்து பிரதாப் போத்தன் இயக்க இருந்த படத்தில் தான் இவர் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப்படம் கைவிடப்பட்ட எப்படியோ 'சோலோ'வில் துல்கருக்கு ஜோடியாக இணைந்துவிட்டார் தன்ஷிகா.
தமிழ், மலையாளம் என ஒரே சமயத்தில் இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார் தன்ஷிகா. பார்வையற்றவராக இருந்தாலும் டான்ஸ் ஆடுவதில் வல்லவராம். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக பார்வையற்றோர் போல எப்படி நடக்கவும் பேசவும் வேண்டும் என்கிற பயிற்சியும் தன்ஷிகாவுக்கு கொடுக்கப்பட்டதாம். பாடி லாங்குவேஜ் சரியாக வரவேண்டும் என்பதற்காக கண்களை கட்டிக்கொண்டு மாடிப்படிகளில் எல்லாம் ஏறி இறங்கி பயிற்சி எடுத்தாராம் தன்ஷிகா. இந்தப்படத்தில் நடித்தது நடிப்புதான் என்றாலும் உண்மையான அனுபவம் போலவே இருந்தது என்கிறார் தன்ஷிகா.
0 comments:
Post a Comment