Sunday, December 11, 2016

புதுயுகம் வினா விடை வேட்டையில் 300 பள்ளிகள் பங்கேற்பு


புதுயுகம் வினா விடை வேட்டையில் 300 பள்ளிகள் பங்கேற்பு



11 டிச,2016 - 13:30 IST






எழுத்தின் அளவு:








புதுயுகம் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி வினா விடை வேட்டை. இதன் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரகமாக நடந்து முடிந்தது. கடைசியாக நடிகை கஸ்தூரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது வினா விடை வேட்டை ஜுனியர்ஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கி உள்ளது. இதனை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்குகிறார். தமிழ்நாடு முழுவதிலிருமிருந்து 300 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பள்ளியின் சார்பில் ஒரு குழுவாக கலந்து கொள்கிறார்கள்.

"இது மற்ற நிகழ்ச்சிகள் போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல பல புதுமையான அம்சங்களை சேர்த்திருக்கிறோம் கலந்து கொள்கிறவர்களை மட்டுமல்ல பார்க்கிறவர்களையும் உற்சாகப்படுத்தும் அம்சங்கள் இதில் இடம் பெறுகிறது. அதில் முக்கியமானது பார்வையாளர்களும் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வெல்லாம். நிகழ்ச்சிக்கென பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது" என்கிறது சேனலின் செய்தி குறிப்பு.


0 comments:

Post a Comment