Sunday, December 11, 2016

எஸ்-3 வில்லனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!









எஸ்-3 வில்லனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!



12 டிச,2016 - 09:26 IST






எழுத்தின் அளவு:








ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 5வது படம் சிங்கம்-3. இதற்கு முன்பு நடித்துள்ள இரண்டு சிங்கம் படங்களைப்போலவே இந்த படமும் சமூக விரோதிகளை சூர்யா வேட்டையாடும் கதையில்தான் உருவாகியிருக்கிறது. ஆனால், கதையில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக உலக அளவிலான சமூக விரோதிகளை துரத்திப்பிடிக்கும் போலீசாக இந்த படத்தில் நடித்துள்ளார் சூர்யா. முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவே இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்று அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள தாகூர் அனூப் சிங்கின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. பெரும்பாலும் ஹீரோக்கள் இடம்பெறும் பர்ஸ்ட் லுக்கே வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் வில்லனுக்கென்று ஒரு பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இந்த தாகூர் அனூப் சிங், மராத்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார்.




Advertisement








ஹன்சிகாவை ஆச்சர்யப்படுத்திய பிரபுதேவா!ஹன்சிகாவை ஆச்சர்யப்படுத்திய ... ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கை ஏற்பு! ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கை ஏற்பு!






0 comments:

Post a Comment