அதிக கட்டணம் : சிங்கம் 3 படத்திற்கு எதிராக வழக்கு
14 டிச,2016 - 15:30 IST
சிங்கம் 3 படத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சி3 படம் உருவாகியுள்ளது. அடுத்தவாரம் டிச., 23ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், சிங்கம்-3 படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட், சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தமிழக அரசு ஆகியோர் டிச., 21-க்குள் உரிய பதில் அளிக்கும்படி கூறி வழக்கை ஒத்திவைத்தது.
0 comments:
Post a Comment