சங்கராந்திக்கு 4 மெகா தெலுங்கு படங்கள் மோதுகின்றன!
16 டிச,2016 - 15:50 IST
தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு பைரவா உள்பட பல படங்கள் களமிறங்குவது போன்று, தெலுங்கில் சங்கராந்திக்கு 4 மெகா நடிகர்கள் நடித்த படங்கள் திரைக்கு வருகின்றன. சிரஞ்சீவி நடித்துள்ள 150 வது படமான கைதி எண்-150, பாலகிருஷ்ணா நடித்துள்ள கவுதமிபுத்ரா சட்டகம், நாகார்ஜூனாவின் ஓம் நமோ வெங்கடேசாயா, வெங்கடேஷின் குரு ஆகிய படங்கள் மோதுகின்றன.
இந்த படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ள கைதி எண் 150 படம் தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் ரீமேக்காகும். அதேபோல், வெங்கடேஷ் நடித்துள்ள குரு தமிழில் மாதவன் நடித்து வெளியான இறுதிச்சுற்று படத்தின் ரீமேக் ஆகும். இப்படி ஒரே நேரத்தில் நான்கு முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்கள் மோதுவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்ற பலத்த போட்டி நடந்து கொண்டிருக்கிறதாம்.
0 comments:
Post a Comment