
“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்… அவர் நம்ம தலைவர் ரஜினிகாந்த்தான்.
பெயரிலேயே காந்தம் இருப்பதால் என்னவோ இன்றுவரை தன் காந்த கண்களால் இந்திய சினிமா ரசிகர்களை கட்டி போட்டிருக்கிறார் இந்த ஸ்டைல் மன்னன்.
சாதாரண கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய இவர் இன்று புகழின் உச்சியில் அதே எளிமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று அவர் தன் 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினியின் தீவிர வெறியர்களுக்காக அவரை பற்றி சில குறிப்புகளை வழங்கியிருக்கிறோம்.
- 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக பிறந்தார்.
- இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
- சிவாஜி ராவ் கைக்வாட்’ என்பதுதான் ரஜினியின் இயற்பெயர்.
- தனது 5 வயதியேயே தாயை இழந்தவர் ரஜினிகாந்த். பின்னர் அண்ணன் மற்றும் அண்ணி வளர்ப்பில் வளர்ந்தார்.
- பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” ஆகிய பள்ளிகளில் தன் படிப்பை முடித்தார்.
- தன் நண்பர்களின் உதவியால் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொண்டார்.
- பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக பயணத்தை தொடங்கினார். இப்படம் 1975ஆம் ஆண்டு வெளியானது.
- மீண்டும் கே.பி. இயக்கத்தில் “மூன்று முடிச்சு” படத்தில் நடித்து தனக்கான ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டார்.
- இப்படத்தில்தான் சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை அறிமுகப்படுத்தினார்.
- பின்னர் தொடர்ந்து அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கத் துவங்கினார். பைரவி படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
- தனது 100வது படத்தில் தான் விரும்பும் “ஸ்ரீராகவேந்திரா” ஸ்வாமிகளாக நடித்து காட்டினார்.
- இவரின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் இப்படத்தையும் அடிக்கடி நினைவுப்படுத்துவார் ரஜினி.
- ரஜினியின் படங்கள் ஒவ்வொன்றும் இவரது படங்களுக்கே போட்டியாக அமைந்தது.
- கமர்ஷியல் படங்களில் நடிக்கத் துவங்கி தன்னை ஒரு கமர்ஷியல் கிங் ஆக மாற்றிக் காட்டினார்.
- ‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில படத்திலும் நடித்து பெருமை சேர்த்தார்.
- தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- தன்னை பேட்டி எடுக்க வந்த எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவிடம் “தன்னை மணக்க விருப்பமா?” என்று கேட்டுள்ளார். பின்னர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
- தன் திருமணத்திற்கு எந்த ஒரு நிருபரையும் அழைக்கவில்லை. காரணம் தன் திருமணத்தை மிக எளிமையாக நடத்த விரும்புவதாக கூறினார்.
- ஒருவேளை நாங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என ஒரு நிருபர் கேட்க… வந்தால் அடிப்பேன் என்று ரஜினி கூறினாராம்.
- தற்போது இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.
தற்போது இரு மகள்களுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகளும் உள்ளனர். - வருடத்திற்கு பல படங்களில் நடித்து தன்னை அடையாளப்படுத்தி கொண்டாலும் 1990ஆம் ஆண்டுகளில் வெளியான படங்கள் ரஜினிக்கு சினிமாவை தாண்டி அடுத்த கட்டத்தை பெற்றுத் தந்தது.
- ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா என ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி பெற்றது.
- ரஜினி படங்கள் வெளியானாலே தங்களுக்கு திருவிழாதான் என தியேட்டர் உரிமையாளர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த முத்து படம் இவருக்கு வெளிநாட்டிலும் ரசிகர்களை பெற்றுத் தந்தது.
- ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதி மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை உலக நாடுகளுக்கு அடையாளம் காண்பித்தது.
- மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான பாபா படம் பல அரசியல் பிரச்சினைகளை சந்தித்தது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் ரஜினி கேரியரில் தோல்வியை சந்தித்தது. - ஆனாலும் தன்னை நம்பிய விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த ஒரே நடிகர் ரஜினிதான்.
- இதன்பின்னர் பி வாசு இயக்கிய “சந்திரமுகி” மாபெரும் வெற்றிப் பெற்றது. ஒரே திரையரங்கில் 800 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
- ஷங்கர் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்த “எந்திரன்’ படம் பல சினிமா சரித்திரங்களை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் புதிய திருப்புமுனையையும் உண்டாக்கியது.
- சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றாலும் இமயமலையின் உச்சிக்கு அடிக்கடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
- இன்னமும் அதே எளிமையோடு தன் ஆன்மிக தேடல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
- டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ரஜினி பற்றி தி நேம் இஸ் ரஜினி என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதே புத்தகம் தமிழில்… ரஜினியின் பேரைக் கேட்டாலே என்ற பெயரில் வெளியாகியது.
- தனது நீண்ட கால நண்பரான தாணு தயாரிப்பில் முதன்முறையாக கபாலி படத்தில் நடித்தார்.
- இப்படத்தின் விளம்பரங்கள் விமானம் வரை பறந்தது.
- தென்னிந்தியாவில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் இப்படத்தின் ரிலீஸ் நாள் அன்று விடுமுறை அளித்தனர்.
- கபாலி படத்தை முதல் நாள் காண வேண்டும் என பல படப்பிடிப்புகள் அன்று நிறுத்தப்பட்டன.
- இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.
- மீண்டும் கபாலி ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் அடுத்த வருடம் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார்.
- ரஜினியின் ஸ்டைல் போலவே அவரின் பன்ச் வசனங்களும் பிரபலம். பன்ச் டயலாக் என்றாலே அது ரஜினிதான்.
- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் அடுத்த தலைமுறை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறபோது, தமிழகத்தில் மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாக இவர் ஒருவரே சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார்.
- இப்பட்டத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருந்தாலும் இவர் அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.
- சிம்பிளா ரஜினி சார் ஸ்டைல்ல சொன்னா… கண்ணா இது நான் சேர்த்த கூட்டம். அன்பால தான சேர்ந்த கூட்டம். இது அன்பு சாம்ராஜ்யம். இதை யாராலும் அசைக்க முடியாது என்று தன் செயலால் செய்து காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.
இன்று அவரது பிறந்த நாளில் நாங்கள் ரசிகர்களுடன் இணைந்து ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.
0 comments:
Post a Comment