பிரியாணிக்கும், கஞ்சிக்கும் விளக்கம் சொன்ன மீரா ஜாஸ்மின்..!
12 டிச,2016 - 17:14 IST
ஒருபக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யபோகிறார் என்கிற செய்தி அடிபட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மீரா ஜாஸ்மின். ஆனாலும் வழக்கம்போல கிளாமராக நடிக்கமாட்டேன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன் என்கிற கண்டிசனையும் முன் வைக்கிறாராம். அதனால் மீராவை தேடி ஆவலாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் இந்த கண்டிஷன்களால் ஜகா வாங்குகிறார்களாம்.
இது பற்றி சமீபத்தில் மீரா ஜாஸ்மினிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு மீரா ஜாஸ்மின் கூலாக சொன்ன பதில் என்ன தெரியுமா..? “சிலருக்கு பிரியாணி பிடிக்கும்.. சாப்பிடுகிறார்கள்.. ஆனால் எனக்கு கஞ்சியும் பயறும் தான் பிடித்திருக்கிறது.. அதற்காக என்னை பார்த்து அடடா உனக்கு பிரியாணி கிடைக்கவில்லையே என ஏன் வருத்தப்படுகிறீர்கள்.. படங்களில் நடிப்பதும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பம்” என பொட்டில் அடித்தாற்போல பதில் கூறியுள்ளாராம் மீரா ஜாஸ்மின்.
0 comments:
Post a Comment