இயக்குனர் ராமிற்காக இறங்கிவந்த மம்முட்டி..!
15 டிச,2016 - 12:31 IST
கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ தாண்டி இருக்கும் ஒரு மலைகிராமம்.. அங்குதான் இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்த 'பேரன்பு' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. யூனிட் மொத்தமும் அங்கேயே தங்கிவிட, மம்முட்டி மட்டும் கொடைக்கானலில் இருந்து தினமும் அங்கே சென்றுவந்தாராம்.. அங்கே போவதற்கே மூன்று மணி நேரம் செலவாகுமாம். முதல் நாள் ஷூட்டிங் கிளம்பிப்போன மம்முட்டி பாதியிலேயே கொடைக்கானலுக்கு திரும்பிவிட்டார். ஆனால் அடுத்ததடுத்து 30 நாட்களுக்கும் மேல் அந்த இடத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் தவறாது கலந்துகொண்டார் மம்முட்டி.
இது படத்தின் இயக்குனர் ராம் மீது மம்முட்டி கொண்ட 'பேரன்பினால்' மட்டுமே சாத்தியமானது... இந்த தகவலை சொல்லியிருப்பவர் ராம் அல்ல.. படத்தின் நாயகன் மம்முட்டியே தான்.. 'பேரன்பு' படத்திற்காக தனது விதிமுறைகளை மம்முட்டி தளர்த்திக்கொண்டு இறங்கி வர காரணம் என்ன..? படத்தின் கதை மம்முட்டிக்கு பிடித்துப்போனது காரணம் என்றாலும், “சில பேர் சொன்னால் சொல்வதை நம்மால் தட்டமுடியாது இல்லையா, அதேபோல ராம் சொல்வதையும் என்னால் தட்டமுடியவில்லை. படப்பிடிப்பு முழுவதும் என்னை ஒரு சகோதரர் போல பார்த்துக்கொண்டார் ராம்” என சிலாகித்து கூறுகிறார் மம்முட்டி.
0 comments:
Post a Comment