சாதனை படைத்த ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்' டிரைலர்
14 டிச,2016 - 17:09 IST
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்களின் வரிசையில் எட்டாம் பாகமாக வெளிவர இருக்கும் படம் ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்'. முந்தைய பாகங்களில் நடித்த வின் டீசல், டுவைன் ஜான்சன், ஜாசன், டைரஸ் ஜிப்சன், மிச்செல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முந்தைய பாகங்களில் நடித்த பால்வாக்கர் மரணம் அடைந்ததால் அவர் இல்லை. இந்தப்படமும் ஆக்ஷ்ன் மற்றும் ரேஸை மையமாக வைத்து தான் படமாக்கப்பட்டுள்ளது.
இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 139 மில்லியன் பார்வையாளர்கள் அதாவது 1 கோடியே 39 லட்சம் பேர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு முன்னர் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட ‛பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' பட டிரைலர் தான் அதிகபட்சமாக ஒருநாளில் 127.6 மி்ல்லியன் பார்வையாளர்களை கொண்டிருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்' பட டிரைலர்.
‛தி பேட் ஆப் தி பியூரியஸ்' படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ஆக்ஷ்ன் பிரியர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.
0 comments:
Post a Comment