பால்கி படத்தில் அக்ஷய் நடிப்பது உறுதியானது
12 டிச,2016 - 15:29 IST
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ‛மோஸ்ட் வாண்டட்' ஹீரோவாக இருப்பவர் அக்ஷய் குமார். தற்போது அக்ஷய், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.O படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‛டாய்லட்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அக்ஷய், பால்கியின் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது இப்போது உறுதியாகியுள்ளது. தற்போது படத்திற்கான கதை முடிவாகியுள்ள நிலையில் படப்பிடிப்பிற்கான இடத்தை தேர்வை செய்யும் பணி நடக்கிறது. அதோடு ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்களை தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது. படத்தின் பெரும்பகுதி மத்திய பிரதேசம் மாநிலத்தில் படமாக்கப்பட இருக்கிறது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. அக்ஷ்ய், டாய்லட் படத்தை முடித்ததும் பால்கி படத்தில் நடிக்க உள்ளார்.
0 comments:
Post a Comment