Monday, December 12, 2016

ஷாருக் படத்திற்கு எதிர்ப்பில்லை: ராஜ் தாக்கரே அறிவிப்பு


ஷாருக் படத்திற்கு எதிர்ப்பில்லை: ராஜ் தாக்கரே அறிவிப்பு



13 டிச,2016 - 08:37 IST






எழுத்தின் அளவு:








பாகிஸ்தான் நடிகை, மஹிரா கான், படத்தின் விளம்பரத்திற்காக இந்தியா வர மாட்டார் என, அந்தப் படத்தின் நடிகர், ஷாருக் கான் உறுதியளித்ததை அடுத்து, படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதில்லை என, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின், யூரி உட்பட, நாட்டின் பல பகுதிகளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து, பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு, ராஜ் தாக்கரே தலைமையிலான, மஹாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.பாகிஸ்தான் சினிமா நட்சத்திரங்கள் நடித்த படங்களை, மும்பையில் திரையிட, அந்நாட்டு நட்சத்திரங்கள் மும்பை வர, அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகிறது.இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள, படத்தில், பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் நடித்துள்ளார்.

படத்தை விளம்பரப்படுத்த, அவர் இந்தியா வந்தால், படத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அறிவித்தது.இதையடுத்து, அக்கட்சியின் தலைவர், ராஜ் தாக்கரேயை நேற்று முன்தினம் சந்தித்த நடிகர் ஷாருக் கான், எந்த காரணத்தை கொண்டும், பாகிஸ்தான் நடிகை மஹிராகான், இந்தியா வர மாட்டார் என, உறுதியளித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ராஜ், படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படாது என, உறுதியளித்துள்ளார். இது போல, சில மாதங்களுக்கு முன், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின், படத்திற்கும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா எதிர்ப்பு தெரிவித்தது. அந்தப் படத்தில், பாக்., நடிகை பாவத் கான் நடித்திருந்தார்.


0 comments:

Post a Comment