ஆர்வத்தை தூண்டிய ஜெயசூர்யாவின் சந்தனமும் திருநீறும்..!
11 டிச,2016 - 16:15 IST
பொதுவாக ஒரு படத்தின் ட்ரெய்லர் என்பது அந்தப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கவேண்டும்.. அனால் இயக்குனர் சித்திக்கின் படங்களை பொறுத்தவரை ட்ரெய்லர்களே தேவியில்லை, திஎட்டருக்க் சென்றால் இரண்டு மணி நேர சிரிப்பும், சுவாரஸ்யமான அனுபவமும் நிச்சயம் என்பது எழுதிவைக்கப்பட்ட ஒன்று.. ஆனாலும் தற்போது அவர் ஜெயசூர்யாவை வைத்து இயக்கியுள்ள 'பக்ரி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பையும் யூகங்களையும் கூடவே சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
இதுநாள் வரை இந்தப்படத்தை பற்றி வெளிவந்துள்ள தகவலின்படி இதில் ஜெயசூர்யாவின் கேரக்டர் பெயர் லக்கி.. அவர் ஒரு இஸ்லாமிய இளைஞனாக நடிக்கிறார் என்பதுதான் தெரியும்.. ஆனால் படத்தின் ட்ரெய்லரை பார்த்தால், அதில் சில காட்சிகளில் நெற்றியில் திருநீறு மற்றும் சந்தானம் வைத்துள்ள ஜெயசூர்யாவை பார்க்க முடிகிறது. அதன்படி பார்த்தால் ஒருவேளை இந்துவான ஜெயசூர்யா இஸ்லாமியராக ஆள் மாறாட்டம் ஆடுகிறாரா, இல்லை இஸ்லாமியராக இருந்து இந்துவாக நடிக்கிறாரா என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.. இன்னும் சிலரோ ஜெயசூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என யூகத்திற்கு திர் கொளுத்தியுள்ளார்கள்.. எப்படியோ கிறிஸ்துமஸ் வந்தால் இந்த உண்மை தெரிந்துவிடப்போகிறது.
0 comments:
Post a Comment