ஓகே ஜானு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர்
15 டிச,2016 - 11:00 IST
தனித்துவமான தனது இயக்கத்தால் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா வரை பேசப்பட்ட ஒரு இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் ‛ஓ காதல் கண்மணி . இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்தனர். தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ‛ஓகே ஜானு என்று பெயரில் ரீமேக்காகி வருகிறது.
ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தை சாஹித் அலி இயக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் கரண்ஜோஹர் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‛ஓகே ஜானு டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‛ஓகே ஜானு படத்தின் டிரைலரை பார்த்த துல்கர் சல்மானும் படக்குழுவை புகழ்ந்து தனது டுவிட்டார் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துல்கர் தனது டுவிட்டரில் கூறியதாவது...." ‛ஓகே ஜானு படத்தின் டிரைலர் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. படத்தின் டிரைலர் பார்த்ததும் ‛ஓகே கண்மணி படத்தில் நான் நடித்தது நினைவிற்கு வருகிறது, படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவு செய்துள்ளார்.
‛ஓகே ஜானு படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளிவருகிறது.
0 comments:
Post a Comment