Tuesday, December 13, 2016

அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்' யோகி பி


அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்' யோகி பி



13 டிச,2016 - 17:34 IST






எழுத்தின் அளவு:








பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவை சேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். அதில் இவரது ‛மடை திறந்து பாடல்...' மிகவும் பிரசித்து பெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார் வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை இவர் தான் பாடினார். தொடர்ந்து தனுஷின் பொல்லாதவன் படத்தில் ‛எங்கேயும் எப்போதும்...' பாடலை பாடினார். அதன்பின் தமிழில் பெரியளவில் பாடாமல் இருந்த யோகி பி இப்போது மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அவரை அழைத்து வந்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்.

அனிருத், தான் இசையமைத்து வரும் அஜித்தின் 57-வது படத்தில் யோகி பி-யை பாட வைத்திருக்கிறார். இதுப்பற்றி அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தமிழ் ஹிப்-ஹாப்பின் தந்தையான யோகி பி, 7 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின் ‛AK57' படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

அதற்கு யோகி பி-யும்... ‛‛இந்த வாய்ப்பு அளித்த சகோதரர் அனிருத்திற்கு நன்றி...'' என்று தெரிவித்திருக்கிறார்.

அஜித்தின் 57-வது படத்தை சிவா இயக்குகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.


0 comments:

Post a Comment