சண்டைக்காட்சிகளில் மம்முட்டியை பார்த்து மிரண்ட ஆர்யா..!
15 டிச,2016 - 12:52 IST
'உறுமி' மற்றும் 'டபுள் பேரல்' படங்களை தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. இந்தப்படத்தில் முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடித்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் ஆர்யா. குறிப்பாக மம்முட்டி நடித்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் மம்முட்டி காட்டிய வேகம் ஆர்யாவை பிரமிக்க வைத்துள்ளதாம். இருவருக்குமான வயது வித்தியாசம்தான் அதிகமே தவிர, ஆர்யாவும் மம்முட்டியும் தவறாது உடற்பயிற்சி செய்பவர்கள். உடம்பை பிட்டாக வைத்துக்கொள்பவர்கள். அதேசமயம் டூப் போட்டு நடிக்கவும் விரும்பாதவர்கள்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி தனது பின்புறம் கட்டப்பட்ட கைகளுடன் சண்டையிடவேண்டும்.. ஒரு கட்டத்தில் உயரமாக எம்பிக்குதித்து அந்தக்கைகளை தனக்கு முன்புறமாக கொண்டுவரவேண்டும். ஜாக்கிசான் போன்ற ஓரிருவர் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை அசால்ட்டாக செய்பவர்கள்.. ஆனால் இந்த காட்சியை பலமுறை ஒத்திகை பார்த்துக்கொண்ட மம்முட்டி, காட்சி படமாக்கப்பட்டபோது இம்மி பிசகாமல் செய்ததை பார்த்ததும்தான் அவர் இத்தனை வயதிலும் எப்படி ஹீரோவாக நடிக்கிறார் என்கிற சூட்சுமம் ஆர்யாவுக்கு விளங்கியதாம். புதுமுகம் ஹனீப் அதேனி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினேகா, மியா ஜார்ஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment