Thursday, December 15, 2016

தியேட்டரில் குறும்படங்களை பார்க்க சூர்யாவின் சூப்பர் முயற்சி


suriya new stillsசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், மூவி பஃப் என்ற நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஃபர்ஸ்ட் கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்போட்டிக்கான அறிமுகவிழா நடைபெற்றது.

இதன் மூலம் குறும்படங்களை தியேட்டரிலும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார் சூர்யா.

இவ்விழாவில் சூர்யா, பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சூர்யா பேசியதாவது…

“மூவி மேக்கிங் சாதாரண விஷயம் அல்ல.

என்னால் அவ்வளவு எளிதாக இயக்க முடியாது. அதான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவிட்டேன்.

எல்லோராலும் கதை எளிதாக சொல்ல முடியும்.

படம் எடுக்க கருவி தேவையில்லை. நல்ல கதை தான் தேவை.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்களை தமிழ்நாட்டில் மட்டும் 70 தியேட்டர்களில் திரையிட இருக்கிறோம்.

இதன் மூலம் நல்ல திறமைசாலிகள் உருவாகலாம் என நம்புகிறேன்.

எனக்கு சினிமாவில் கொஞ்சம் 18 வருட அனுபவம் உள்ளது.

அதை வைத்துக்கொண்டு என்னால் எதை செய்யமுடியுமோ, அதை செய்கிறேன்” என்றார் சூர்யா.

0 comments:

Post a Comment