மலையாள ரீமேக்கில் அரவிந்த்சாமி!
12 டிச,2016 - 09:00 IST
முதல் இன்னிங்சில் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அரவிந்த்சாமி, செகண்ட் இன்னிங்சில் தனி ஒருவனில் வில்லனாக நடித்து மறுபடியும் பிரபலமாக விட்டார். என்றாலும், தொடர்ந்து வில்லனாக நடிக்க விரும்பாத அரவிந்த்சாமி, போகன், சதுரங்கவேட்டை-2 படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித் துள்ளார். இதையடுத்து செல்வா இயக்கத்தில் நான் அவனில்லை பாணியில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஐந்து நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இதற்கிடையே, மலையாளத்தில் மம்மூட்டி- நயன்தாரா நடித்து வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் அப்படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறாராம். மலையாள பதிப்பில் நடித்த நயன்தாரா தமிழிலும் நடிக்கிறாரா? இல்லையா? என்கிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment