காமெடி படத்தில் நடிக்க அசைப்படும் சல்மான் கான்
15 டிச,2016 - 16:00 IST
பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 நடிகராக இருப்பவர் சல்மான் கான். சுல்தான் படத்தை தொடர்ந்து தற்போது கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப் லைட்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சல்மான்கான், நிறைய அக்ஷ்ன் படங்களில் நடித்துவிட்டேன், காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி சல்மான் மேலும் கூறியதாவது.... "எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும், நிறைய ஆக்ஷ்ன் படங்களில் நடித்துவிட்டேன், இப்போது காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அவ்வாறான படங்கள் பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும், ஆனால் இதுபோன்ற காமெடி படங்களில் நடிப்பது தான் சிரமமானது. ரசிகர்களை சிரிக்க வைப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் காட்சிகளிலோ அல்லது 40-50 பேருடன் சண்டைக்காட்சியில் நடிப்பது ஈஸி, ஆனால் காமெடி படத்தில் நடிப்பது கஷ்டமானது. நல்ல காமெடி கதைக்களம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்றார்.
சல்மான் கான், தற்போது நடித்து வரும் படம் ‛டியூப் லைட்' படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2தும் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment