Friday, December 16, 2016

கலாபாவன் சாஜனுக்கு மோகன்லால் தந்த அட்வைஸ்..!


கலாபாவன் சாஜனுக்கு மோகன்லால் தந்த அட்வைஸ்..!



16 டிச,2016 - 11:36 IST






எழுத்தின் அளவு:








கலாபவன் சாஜன்... மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தில் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை டார்ச்சர் கொடுக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக பளிச்சென ரசிகர்களின் மனதில் சம்மணமிட்டு அமர்ந்தவர். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த கலாபவன் சாஜன், இந்த வருட ஆரம்பத்தில் வெளியான பிருத்விராஜின் 'பாவாட' படத்தில் வயதான வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் பாராட்டுக்களை அள்ளிச்சென்றார். 'த்ரிஷ்யம்' படத்திற்கு முன் அவர் நிறைய படங்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருந்தாலும் 'த்ரிஷ்யம்' தான் ரசிகர்களிடம் அவரை அடையாளம் காட்டியது..

இன்னொரு விஷயம், மோகன்லாலுடன் அவர் நடித்த முதல் படம் த்ரிஷ்யம் அல்ல.. அதே வருடத்தில் சித்திக் இயக்கத்தில் வெளியான 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்' படத்தில் மோகன்லாலின் நண்பராக படம் முழுவதும் வரும் காமெடி ரோலில் நடித்திருந்தார் சாஜன்.. அந்த சமயத்தில் மோகன்லால் அவரிடம் நடிப்பு பற்றிய சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தராம்.. குறிப்பாக, வசனங்கள் என்பது யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்து, அதை நாம் பேசுவது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட கூடாது.. மாறாக அந்த வசனங்கள் அனைத்தும் நமது மனதில் இருந்து சொந்தமாக நாமே பேசுவது போன்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும் என கூறினாராம். அதை பின்பற்றி நடித்ததால் தான் 'த்ரிஷ்யம்' படத்தில் தன்னால் அவ்வளவு பாராட்டு பெறும் விதமாக நடிக்க முடிந்தது என்று கூறியுள்ளார் கலாபவன் சாஜன்.


0 comments:

Post a Comment