காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகும் சமந்தா
15 டிச,2016 - 12:32 IST
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் நடிகை சமந்தா தனது காதலர் நாக சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்பாடுகள் செய்ய துவங்கிவிட்டார். அண்மையில் நாகசைதன்யாவின் சகோதரர் அகிலின் திருமண நிச்சயதார்த்த விழாவை சமந்தா முன்னின்று நடத்தினார். மூத்த மருமகளாக மாறும் முன்னரே தனது வருங்கால கணவர் நாகசைதன்யாவின் தம்பி அகில்-ஸ்ரேயா பூபலின் திருமண நிச்சயதார்த்தை சமந்தா முன்னின்று நடத்தியது பலரது புருவங்களை உயரச் செய்தது.
இது ஒருபுறம் இருக்க அடுத்ததாக கிறிஸ்துமஸ் கொண்டாட சமந்தா தனது ஐதராபாத் இல்லத்தில் ஏற்பாடு செய்து வருகின்றார். கிறிஸ்தவ பெண்னான சமந்தா வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுபவர். இந்த வருடம் தனது காதலர் நாகசைதன்யாவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால் வழக்கத்தை விட அதிக உற்சாகத்தில் சமந்தா காணப்படுகின்றார். திருமணம் செய்து கொள்ளாமல் தனது காதலர் நாகசைதன்யாவுடன் லிவிங் டுகெதரில் இணைந்து வாழும் சமந்தா, தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பத்தில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றார். நாகசைதன்யாவும் சமந்தாவும் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் புகைப்படங்களை இணையத்தில் கசிந்துள்ளன.
0 comments:
Post a Comment