Friday, December 16, 2016

ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்


ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்



16 டிச,2016 - 17:22 IST






எழுத்தின் அளவு:








கண்ட நாள் முதல் படத்தில் லைலாவிற்கு தங்கையாக தமிழ் படங்களில் நடிக்க துவங்கிய ரெஜினா, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரெஜினா, இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இரு தினங்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய ரெஜினாவிற்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் நக்ஷத்ரம் படக்குழுவினர் ரெஜினாவின் பிறந்த நாளை மறந்து விட்டனர். இதனால் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்டுள்ள இயக்குனர் கிருஷ்ண வம்சி, ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு நக்ஷத்ரம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment