Tuesday, December 13, 2016

கரண் ஜோகர் தயாரிப்பில் ஹிருத்திக் - தீபிகா


கரண் ஜோகர் தயாரிப்பில் ஹிருத்திக் - தீபிகா



13 டிச,2016 - 16:11 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோகர். சமீபத்தில் இவரது இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில் ' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சில படங்களை தயாரித்து வரும் கரண், அடுத்தப்படியாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகாவை வைத்து ஒரு படத்தை, தனது தர்மா பேனரில் தயாரிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் கரண் மல்ஹோத்ரா இயக்க உள்ளார். ஹிருத்திக் - தீபிகா இருவருக்கும் படத்தின் கதை பிடித்து போய்விட்டது. ஹிருத்திக் உடனே கால்ஷீட் வழங்கிவிட்டார். ஆனால் தீபிகா, பத்மாவதி படத்தில் பிஸியாக இருப்பதால் அதை முடித்ததும் தனது கால்ஷீட்டை வழங்குவார் என தெரிகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.


0 comments:

Post a Comment