Friday, December 16, 2016

இறந்த ‘அம்மா’வுக்கு உயிர் கொடுக்க தனுஷ் முயற்சி


dhanush sadதனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2.


இப்படத்தை கலைப்புலி தாணுவும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார்.

இதன் சூட்டிங்கை நேற்று ரஜினிகாந்த், க்ளாப் அடித்து துவங்கி வைத்தார்.

இப்படத்தின் முதல் பாகத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இறந்துவிடுவதாக காட்சி இருக்கும்.

ஆனால் இரண்டாம் பாகத்திலும் சரண்யா நடிக்கவிருக்கிறாராம்.

அது எப்படி? என்று கேட்டால் அது மட்டும் சஸ்பென்ஸ் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

எது எப்படியோ? இறந்த அம்மாவை மீட்டு வந்தால் சரிதானே…

0 comments:

Post a Comment