Monday, December 12, 2016

சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படும் டைகர் ஷெரப்


சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படும் டைகர் ஷெரப்



12 டிச,2016 - 13:00 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். ஹீரோபன்டி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான டைகர், தொடர்ந்து பாகி, பிளையிங் ஜாட் படங்களில் நடித்தார். அடுத்தப்படியாக, முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற டைகர், தனக்கு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

இதுப்பற்றி டைகர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க ஆசை. ஹாலிவுட் கலைஞர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இயற்கையாக சில தூரம் எந்த துணையும் இன்றி பறந்து செல்வேன். இதன்மூலம் விஷூவல் எபக்ட்ஸ்க்கு ஆகும் செலவு குறையும். என் கனவு எல்லாம் ஹாலிவுட்டில் சூப்பர்மேன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment