Friday, May 12, 2017

த்ரிஷ்யத்தை வென்று புலிமுருகனிடம் தோற்ற பாகுபலி2


Puli Murugan stillsகேரள சினிமா வரலாற்றில் பெரும் சாதனை படைத்த படம் மோகன்லாலின் புலிமுருகன்.


இப்படம் கேரளாவில் மட்டும் ரூ. 90 கோடியை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன்பு மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ ரூ.45 கோடியையும் ‘ஒப்பம்’ படம் ரூ.42.5 கோடியையும் வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘பாகுபலி 2′ படம் ரூ. 46 கோடியை வசூலில் நெருங்கி கொண்டிருக்கிறதாம்.

இதன் மூலம் த்ரிஷ்யம் மற்றும் ஒப்பம் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது பாகுபலி2.

ஆனால் கேரளாவில் புலிமுருகன் வசூலை முடியடிப்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ரூ. 1200 கோடியை பாகுபலி2 படம் வசூலித்து, தற்போதும் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment