Thursday, May 11, 2017

'பாகுபலி 2', 'சிவகாமி' கதாபாத்திரத்தால் புதிய சர்ச்சை


'பாகுபலி 2', 'சிவகாமி' கதாபாத்திரத்தால் புதிய சர்ச்சை



11 மே,2017 - 15:11 IST






எழுத்தின் அளவு:








'மகேந்திர பாகுபலி' என ரம்யாகிருஷ்ணன் அடிவயிற்றிலிருந்து குரல் கொடுக்கும் அந்த சத்தத்தால் 'பாகுபலி 2' படத்தைப் பார்த்த பலருக்கும் புல்லரித்துப் போயிருக்கும். இரண்டு பாகங்களில் 'ராஜமாதா சிவகாமி' கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

'படையப்பா' படத்தில் ரஜினிகாந்தை விடவும் மிரள வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் நடித்திருந்தால் படமே தோற்றுப் போயிருக்கும். அப்படித்தான் 'பாகுபலி' படமும். ரம்யா கிருஷ்ணன் நடிப்பு சிவகாமி கதாபாத்திரத்தில் உயர்ந்து நிற்கிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னுடைய நடிப்பால் அப்படி ஒரு மரியாதையைச் சேர்த்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

ஆனால், கடந்த சில நாட்களாக 'சிவகாமி' கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தால் அவர் மற்ற நடிகர்களைக் கூட பின்னுக்குத் தள்ளியிருப்பார் என ராம்கோபால் வர்மா டிவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். தன்னை எப்போதுமே ஸ்ரீதேவி ரசிகனாகக் காட்டிக் கொள்ளும் ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.'பாகுபலி 2' வட்டாரங்களில் ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.

சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியிடம் பேசிய போது பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம். அதோடு, படத்தின் லாபத்திலும் பங்கு வேண்டும் என்றாராம். அதற்கு 'பாகுபலி' தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளார்கள்.

படத்தில் நடிக்காத ஸ்ரீதேவியைப் பற்றி இப்போது அவர் நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று சொல்வது அந்த சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் ரம்யாகிருஷ்ணனை அவமதிப்பது போல் ஆகும் என்று படக்குழுவினர் நினைக்கிறார்களாம்.

ஸ்ரீதேவி நடித்த 'புலி' படம் என்ன ஆனது என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாது போலிருக்கிறது.


0 comments:

Post a Comment